மொறுமொறு மரவள்ளிகிழங்கு குர்குரே செய்யலாமா..!
தேவையான பொருட்கள்:
மரவள்ளிகிழங்கு 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சோளமாவு 3 ஸ்பூன்
அரிசி மாவு 1 ஸ்பூன்
கடலை மாவு 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு சிறிது
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
முதலில் மரவள்ளிகிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி நீள நீளமாக நறுக்கி 2 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்து வைத்துள்ள கிழங்கை சிறிது சிறிதாக சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் மொறுமொறு மரவள்ளிகிழங்கு குர்குரே தயார்.
நீங்களும் இத வீட்ல ட்ரைப் பண்ணி பாருங்க.