நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக…!!
வங்கக்கடலில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 சென்டிமீட்டர் கன மழை பெய்த காரணத்தால் பழவேற்காட்டில் இருந்து 70 படகுகள் மீட்பு பணிக்காக சோழவரம், பூந்தமல்லி, ஆவடி, வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் 3 மணி நேரம் பெய்த கன மழை காரணமாக காந்திநகர் அடுத்த காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும், மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த நீரில் ஏராளமான குப்பை மற்றும் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றது, அங்கு இருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.
மயிலாடுதுறையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 நாட்களே உள்ளதால், 30 நாட்கள் தீர்த்தவாரி நடைபெறும் வகையில் புரட்டாசிமாத கடைசி நாளான இன்று ஐப்பசி மாதப்பிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனக் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரியில் தருமபுரம் ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து புனித நீராடினர்.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் கூலி உயர்வை உயர்த்தி உயர் அதிகாரிகளுக்கும், மாநகராட்சிக்கும், அனுப்பியும் கூலி உயர்வை வழங்காமல் இருப்பதை கண்டித்து பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொடைக்கானலில் நடைப்பெற்ற 61 வது மலர் கண்காட்சி விழாவை வேளாண்மை துறை செயலாளர், சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் சுமார் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலர் உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மலர் கண்காட்சி அரங்கத்தில் 2500 க்கும் அதிகமான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..