புகையிலை பொருட்கள் பறிமுதல்…!! பரபரப்பான அரியலூர்..!!
அரியலூர் அருகே ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருட்களை நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புதுறையினர் பறிமுதல் செய்தனர்
போதைபொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது., போதைபொருள் புழக்கம் மட்டுமின்றி அதனை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை பிடிபதற்காகவும் அரசு முயற்சித்து வருகிறது.. அதற்காக ஆங்காங்கே காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று
அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புதுறை சார்பில் உள்ள வணிக நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நெகிழிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் கடையின் உரிமையாளருக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் , தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்பனை செய்ததற்கு 1,000 ரூபாய் என மொத்தம் 26,000 ரூபாய் அபராதம் விதித்து கடையை மூடி சீல் வைத்தனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..