“சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை” மாத செலவையும் அரசே ஏற்கும்..!!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்படும் ஹரியானா முதலமைச்சர் நயாப் சைனி தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் கடந்த அக்டோபர் அக்டோபர் 1ம் தேதி நடைபெற்றது., அதன் தேர்தல் முடிவுகளானது அக்டோபர் 5ம் தேதி வெளியானது அதில் பாஜக 90 தொகுதிகளில் 48 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஹரியானா மாநில முதலமைச்சராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றார். பதவியேற்ற பின் தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக “ஹரியானாவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கபடும் என அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறி அதற்காக தன் முதல் கையெழுத்தையும் பதிவிட்டுள்ளார்..
டயாலிசிஸ் சிகிச்சைகாக ஒரு நோயாளிக்கு ஏற்படும் மாத செலவானது 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை செலவாகிறது அதற்கான செலவையும் இனி அரசே ஏற்றுக்கொள்ளும் என ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..