சமையலை எளிமையாக்க சில டிப்ஸ்..!
வடை மற்றும் அடை மாவில் நீர் அதிகமாகி போய்விட்டால் அதில் சிறிது சோளமாவு சேர்த்து கலந்து விட்டால் மாவு கெட்டியாகிவிடும்.
வேகவைத்த உருளைக்கிழங்குடன் அரிசிமாவு, கடலைமாவு சேர்த்து ஓமப்பொடி செய்ய சூப்பராக இருக்கும்.
வெந்தயக்குழம்பு செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடியாக்கி சேர்க்க குழம்பு சூப்பராக இருக்கும்.
பருப்பு வடை மற்றும் பகோடா செய்யும்போது அதில் சோம்பு சேர்த்து செய்ய நல்லா மணமாக இருக்கும்.
முருங்கைக்கீரை பொரியல் செய்யும்போது அதில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி செய்தால் சூப்பராக இருக்கும்.
வெண்டைக்காயை முதலில் எண்ணெயில் வதக்கி பின் குழம்பில் சேர்க்க வழுவழுப்பு இருக்காது.
பாகற்காய் பொரியலில் இரண்டு தக்காளியை அரைத்து சேர்த்து செய்தால் அதன் கசப்பு தெரியாது.
பொன்னாங்கண்ணி கீரையில் பாசிப்பருப்பு, வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவை சேர்த்து மசியல் செய்து சாப்பிட ரத்தம் தூய்மை பெறும்.
பீன்ஸ் பொரியலில் கடைசியாக வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து கிளறி விட ருசியாக இருக்கும்.