“கும்மி அடி பெண்ணே கும்மி அடி..” தமிழிசை சவுந்தரராஜன் கொண்டாட்டம்..!!
திருப்பூர், பெருமாநல்லூரில் அழகு வள்ளி கும்மி கலைக்குழு சாதனை கும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பாஜக தமிழிசை வள்ளி கும்மி ஆடி மகிழ்ந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பெருமாநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் நேற்று சாதனை நிகழ்ச்சிக்காக அழகு வள்ளி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் கும்மியாட்டக் கலைக்குழுவுடன் இணைந்து அவர் சிறிது நேரம் வள்ளி கும்மி நடனமாடி மகிழ்ந்தார்.
மேலும் 7 மணி நேரம் 7 நிமிடம் 7 நொடிகள் மற்றும் 333 கலைஞர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து நடனமாடும் நிகழ்ச்சியை நிகழ்ச்சி நேர கடிகாரத்தை பொத்தானை அமுக்கி ஆரம்பித்து வைத்தார். ஒரு குழந்தைக்கு காலில் சலங்கை கட்டி விட்ட சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரம் செய்தார்.
அதைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்.. இத்தனை மக்கள் ஒரே இடத்தில் கூடி நமது பாரம்பரிய கும்மியாட்டத்தில் ஈடுபடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. இதுபோன்று நாம் தொடர்ந்து ஆடுவதினால், நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நம், உடலுக்கு இதுபோன்று பயிற்சிகள் கொடுப்பதினால், பல்வேறு நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..