தலைவலியால் அவதியா..?
பெரும்பாலும் தவிர்க்க முடியாத வலிகளால் அவதிப்படுபவர்கள் தலைவலி உடையவர்கள் தான்.
சிலருக்கு இந்த தலைவலியானது எழுந்ததில் இருந்து இரவு அவர்கள் உறங்கும் வரை இருக்கும். இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்போமா..
தலைவலிக்கு முக்கியமானது வாகனங்களில் இருந்து வரும் இரைச்சல், அதிகபடியான வேலைபளு, சரியான நேரத்திற்குள் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நேரக்குறைவு, எதிர்கால ஃபிளான்ஸ், கவலைகள், ஃபேமிலியை பற்றிய சிந்தனைகள், உடல் நலக் கோளாறுகள் என தலைவலிக்கு பலவகையான காரணங்கள் இருக்கும்.
பட்டையில் கால்சியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை பயன்படுத்தி தினமும் பிளாக் டீ போட்டு குடித்து வர உடல் நல குறைவான சைனஸ் பிரச்சனையால் உண்டாகும் தலைவலியை தவிர்க்கலாம்.
தலைவலி குறைய நமது இடது கை கட்டை விரலின் மேல் பகுதியை, வலது கை விரல்களால் பிடித்துக் கொண்டு அழுத்தம் கொடுத்து வர தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
இரண்டு உள்ளங்கைகளையும் தொடர்ந்து உரசி அதில் வரும் சூட்டை கண்களின் மீது சில நேரம் வைத்து பொத்தி எடுக்கலாம்.
தண்ணீரை கொண்டு முகத்தில் வேகமாக அடித்து கழுவதினாலும் தலைவலி குறைய வாய்ப்பு உண்டு.
அன்றாடம் வெயிலில் அலந்து திரிந்து வேலை செய்பவர்கள் கீழே சொல்லும் உணவுகளை தவிர்த்தாலே தலைவலியில் இருந்து விடுபடலாம், அவை ஜாம், சிப்ஸ் வகைகள், கார்ன்ஃபிளேக்ஸ், புகை, ஆல்கஹால், நிகோட்டின், கஃபைன், நைட்ரேட் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.