உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடலாமா..!
பெரும்பாலோர் உணவிற்கு பின் கடைசியாக இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் முதலில் சூப் வகைகள் தான் முதலில் வருகிறது கடைசியாகத்தான் இனிப்பு வருகிறது.
ஆனால் நம்முடைய பாரம்பரிய முறைப்படி இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்ற வரிசையில் உண்பதே உடலுக்கு நன்மை அளிக்கும் விதமாகும்.
இனிப்பு பொருட்களை முதலில் சாப்பிடும்போது அது வயிற்றில் உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது இதனால் செரிமான தன்மை மேம்படுகிறது.
ஆனால் இனிப்பை கடைசியாக சாப்பிடும்போது அது அமிலத்துடன் வினைபுரிந்து செரிமானத்தை பாதித்து வயிறு உப்பசம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எல்லா நேரங்களிலும் இனிப்பு பொருட்களை உணவிற்கு முன் தான் சாப்பிட வேண்டும். காரணம் சாப்பாட்டிற்கு முன் செரிமான சக்தி அதிகமாக இருக்கும் அதனால் இனிப்பு எளிமையாக ஜீரணமாகிவிடும். அதற்கு அடுத்ததாக வரிசைப்படி உணவுகளை உட்கொள்வதினால் செரிமானம் சீராக இருக்கும்.