நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பலமுறை காங்கேயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாசிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் தங்களது குழந்தைகளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூரிய பிரகாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டதில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை சிவராசு பார்வையிட்டு குப்பைகள் தரம் பிரித்தல், அதன் மூலம் உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகனவேல். இவர் தனது பசு மாட்டிற்கு குண்டு மல்லி என்று பெயரிட்டு குடும்பத்தில் ஒரு உறுப்பினராக செல்லமாக வளர்த்து வருகிறார். அந்த பசு மாடு தற்போது 9 மாத சினையாக உள்ள நிலையில் மோகனவேல் தனது மாட்டிற்கு வளைகாப்பு ஏற்பாடுகளை தடபுடலாக செய்தார். பின்னர் மாட்டிற்கு வளைகாப்பு என்பதால் அதைக் காண ஊர் பொதுமக்களும் ஆவலுடன் வந்திருந்தனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள பொன்னை ஆற்றின் குறுக்கே தமிழக அரசின் சார்பில் நீர் வளத்துறை தடுப்பணை ஒன்றை அமைத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். தற்போது தொடர்ந்து ஒருவாரகாலமாக பெய்த மழையால் பொன்னை ஆற்றில் நீர் அந்த தடுப்பணையில் முழுவதுமாக நிரம்பியது. இதனால் காட்பாடி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் குகைய நல்லூர் ஊராட்சி தலைவர் புவனேஷ்குமார் கிராம மக்கள் ஆகியோர் பூத்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட அபாயாம்பாள்புரம் என்ற பகுதியில் ஏழை மக்கள் 120 குடும்பத்தினர் பலர் குடிசை வீடுகளில் தங்கி உள்ளனர். பலர் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால். நகராட்சி மேம்பாட்டு நிதி 19.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் :
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழி சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டிரான்ஸ்போர்ட் ஒன்றில் இரவு நேரங்களில் ஆட்டோ மூலம் அதிகப்படியான பட்டாசுகளை ஏற்றி வந்து வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக குடியிருப்பு பகுதிகளின் அருகே வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்போன்கள் களவு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக இதுவரையில் 600 புகார்கள் வந்தது. இந்த நிலையில் செல்போன் டிராக்கர் ஆப் மூலம் 200 செல் போன்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இவைகளின் மதிப்பு 38 லட்சமாகும். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் பொதுமக்கள் வந்து தங்களின் செல் போன்களை பெற்று சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..