உடல் பாதிப்பை ஏற்படுத்தும் பாதாம்..!! யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது..?
பாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.., அதிலும் ஊற வைத்த பாதம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.. என நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.. அப்படி இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பாதம் சாப்பிடுவது உடல் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
பாதம்-ல் ப்ரோட்டீன், ஃபைபர் சத்து, மினரல்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் உள்ளிட்ட புரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது.., அதேபோல் பாதாம்களை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை கொடுக்கும்..
அப்படி ஆரோக்கியத்தை கொடுக்கும் பாதாம் நாம் அதிகம் எடுத்துக்கொண்டால் சில நோய்களை ஏற்படுத்தும்..
சயனோ-ஜெனிக் கிளைகோசைட்ஸ் :
பாதாமில் உள்ள அமிக்டலின் (amygdalin) என்ற கலவை இருப்பதால் அதனை நாம் அதிகம் எடுத்துக்கொண்டால் சயனைடு என்ற நச்சு பொருள் வெளியாகி வயிறு வலி., உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்..
பாதம்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்., அதிக அளவில் எடுத்துக்கொள்வது கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்..
ஒரு சில பாதாம் பருப்புகளில் இருந்து வெளிவரும் சயனைட்டு ரத்தத்தின் அளவை குறைத்து விடும் என சொல்லப்படுகிறது..
அதேபோல் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள்.., மருத்துவர்களை ஆலோசித்து அதன் பின்னர் தினமும் பாதம் எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக டயட்டில் இருப்பவர்கள்..
ஒவ்வாமை :
ஒரு சிலருக்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தும்., இதனால் முகத்தில் லேசான படை நோய் தோன்றும்., மேலும் அனாபிலாக்ஸிஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
செரிமான பிரச்சனைகள் :
பாதாம் பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஒரு சிலருக்கு (irritable bowel syndrome) உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
பாதாம் உடலுக்கு ஆரோக்கியமானது என கருத்தப்பட்டாலும் அதை அதிகம் எடுத்து கொள்வது அத்தியாவசியமான ஒன்று எனவும் சொல்லப்படுகிறது..
பாதம் உடல் எடை குறைப்பு போன்றவற்றில் உதவியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பாதம் உதவியாக இருக்காது.. எனவே அதிக உடல் எடை கொண்டவர்கள் மருத்துவர்களை ஆலோசித்து பாதாம் சாப்பிடுவது நல்லது..
அதேபோல் நாள் ஒன்றுக்கு 5 பாதம் முதல் 7 பாதம் எடுத்துக்கொள்வது அளவானது ஆரோக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..