தவெக கொள்கை பரப்பு தலைவர்கள் அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.. அவர்களை உற்சாக படுத்தும் விதமாக முன்னதாக கிராமிய இசைகள் இசைக்கப்பட்டது..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது., முன்னதாக பாரதியார், காமராசர், முத்துராமலிங்க தேவர், உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்..
அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது., அதனை தொடர்ந்து கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் வாசிக்க தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
அதனை தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்கள் பெயரையும் பாடலும் வெளியானது…
பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜபீட ஆகியோர் தவெகவின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..