“கெட்டப் பையன் சார் அந்த சின்ன பையன்…” விஜய் சொன்னது யாரை தெரியுமா..?
தவெக மாநாட்டின்போது விஜய் பேசிய பாண்டிய மன்னன் யார் என்று தற்போது தெரியவந்துள்ளது.
அது யார் என்பதை ஒரு சிறிய பதிவு பார்க்லாம் வாங்க;
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டாக நடைபெற்றது.
இதில் தவெக கட்சி தலைவர் விஜய் தனது லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல் அரசியல் உரையை நிகழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற மாநாட்டின் தனது கட்சியின் கொள்கை, செயல்திட்டம், தனது அரசியல் எதிரிகள், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தையும் அதிரடியாக அறிவித்தார்.
தவெக தலைவர் மாநாட்டு மேடையில் அரசியல் குட்டி கதை ஒன்றை கூறினார்.
அதில் சங்க இலங்கிய வரலாறு ஒன்றை குறிப்பிட்டும் பேசி இருந்தார். அந்த கதையில் பாண்டிய சிறுவன் என குறிப்பிட்டு விஜய் பேசியது யார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.
சங்க இலங்கியங்களின்படி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற மன்னன் தான் தவெக தலைவர் கூறிய சிறுவன் ஆவார்.
அந்த மன்னர் சிறுவயதில் தனது தந்தையை இழந்ததால் மன்னராக ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என சேர, சோழ நாட்டு மன்னர்கள் நினைத்து போர் தொடுத்துள்ளனா். அப்போது அவர்களை கண்டு அஞ்சாமல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், எதிர்த்து போர் தொடுத்துள்ளார்.
போரில் வெற்றி பெற்றதை புறநானூறு உள்ளிட்ட இலங்கியங்கள் கூறுகின்றன.
இதை தான் தவெக தலைவரும் நேற்று கூறி இருந்தார். கெட்டப்பய சார் அந்த சின்ன பையன் என்று தவெக தலைவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிட்டு இருந்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..