ஒரு தொண்டனுக்கு இவ்வளவு தான் மரியாதையா..? ஆதங்கமான மக்கள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டாக நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக., தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் வருகை தந்தனர். அப்போது திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு வரும் வழியில் தவெக தொண்டர் ஒருவர் விபத்தில் உயிர் இழந்தார்..
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நிர்வாகி கலைசெல்வம் அவர்களின் உடலுக்கு நேரில் யாரும் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்றும், கட்சியின் தலைமையில் இருந்து யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்..
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது., நிர்வாகியின் இறப்பு செய்தி வந்ததையடுத்து., மாநாட்டில் யாரும் அஞ்சலி கூட செலுத்தவில்லை.
கலை சிறு வயதில் இருந்தே விஜயின் ரசிகன்., கட்சிக்காக உழைத்தவன் அப்படி இருக்கையில் அவர்கள் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை
இப்போ எல்லார்கிட்டையும் ஸ்மார்ட் போன் இருக்கு., இந்த செய்தி விஜய்க்கு தெரியாமல் இருக்குமா..? ஒரு தொண்டனுக்கு இவ்வளவு தான் மரியாதையா..?என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
இத்தகைய சூழலில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்., உயிரிழந்த நிர்வாகி கலையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..