திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் படுகாயம், மற்றும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், பெங்களுரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்த டேங்கர் லாரியும், செங்கம் அடுத்த அரசங்கண்ணி காட்டுப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கம் தீயணைப்பு மற்றும் மேல்செங்கம் காவல்துறையினர் விபத்தில் காயம் அடைந்த பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், லாரி ஓட்டுநர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இந்த விபத்து குறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.