மனிதன் மனிதனாக வாழ இது ரொம்ப முக்கியம்..!
ஒரு மனிதன் மற்ற விலங்குகளிடம் இருந்து மாறுபட்டு காண்பதற்கு முக்கிய காரணம் அவனிடம் இருக்கும் மனிதாபிமானம் ஆகும்.
அப்படி மனிதன் மனிதனாக வாழ கடைபிடிக்க சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
- மனிதனாக பிறந்தவர்கள் தன்னுடைய தாய் மற்றும் தந்தையை உயரமான இடத்தில் வைத்து மதிப்பது மிகவும் முக்கியமானது.
- எந்தவொரு செயலையும் நல்ல நாள் பார்த்து செய்யலாம் என நாள் கடத்தாமல் இன்றைய நாளே நல்ல நாள் என செயல்பட வேண்டும்.
- மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் மன்னிப்பு தயங்காமல் கேட்க வேண்டும்.
- நீங்கள் எவ்வளவு உயரமான இடத்திற்கு சென்றாலும் உங்களிடம் பணிவு என்பது கட்டாயம் இருக்க வேண்டும்.
- மற்றவர்களிடம் வெறுப்பு காட்டாமல் இருக்க வேண்டும்.
- எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டியது நம்பிக்கை மட்டுமே.
- நம்மிடம் பேராசை என்பது இருக்கவே கூடாது.
- மற்றவர்களிடம் குறை காண்பதை குறைத்துக் கொள்வது சிறந்தது.
- அடுத்தவர்களை பார்த்து பொறாமை படும் குணத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
- உங்களை பற்றியோ உங்களை சார்ந்தவர்களை பற்றிய வதந்தியை நம்பவே கூடாது.
- அடுத்தவர்களிடம் பேசும்போது அளவாக பேச வேண்டும். அதிக பேச்சு ஆபத்தை விளைவிக்கும்.
- எந்தவொரு சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் என்பதை செய்யவே கூடாது.
- நம்மிடம் இருக்கும் சோம்பேறி தனத்தை கண்டிப்பாக விலக்கி வைக்க வேண்டும்.
- உங்கள் வாழ்க்கையில் உயர்வுக்கு செல்ல உழைப்பை மட்டுமே நம்ம வேண்டும்.
- உங்களுக்கு கிடைக்கும் சின்ன வாய்ப்பை கூட தவரவிடக்கூடாது.
- உங்களிடம் நட்புக்கு வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- உங்களுக்கு மற்றவர்கள் செல்லும் நன்றியை கண்டிப்பாக மறக்கவே கூடாது.
- உதவி தேவைப்படும் இடத்தில் கண்டிப்பாக உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.
மேற்கூறிய விஷயங்களை கடைப்பிடிப்பதால் நீங்களும் மனிதனாக வாழலாம். மனிதனாய் பிறந்த அனைவரும் அவர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.