தவெக மாநாட்டில் வேறு விஜயை பார்த்தேன்..!! ராதிகா சரத்குமார் பதிவு..!
தவெக மாநாட்டில் வேறு விஜயை பார்த்தேன் – ராதிகா சரத்குமார் தகவல்..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டாமாக 5லட்சம் நிர்வாகிகளுடன் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது..
அதை அடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.
விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை இயக்கிய படங்களில் நான் நடித்துபோது அவரை பார்த்து இருக்கிரேன். ரொம்ப அமைதியாக இருப்பார்.
ஆனால் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜயை பார்த்தேன். அந்த அள்வுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய் பாஜகவை யோசித்து தான் தாக்குவார் என கருதுகிறேன்.. இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..