“இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீ தான்.. அழகியடி…” ஐஸ்வர்யா ராய் சினிமா பயணம்..!!
ஐஸ்வர்யா ராய் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே.., 1994ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.. அதன் பின்னர் அவர் “உலக அழகி” என அழைக்கப்பட்டார்..
அதன் பின்னர் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்..
அதன் பின்னர் ஹிந்தியிலும் “பியார் ஹோ கயா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்..
அதனை தொடர்ந்து., தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடிக்க தொடங்கினார்..
அதேபோல் தமிழிலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.., ஜீன்ஸ், ராவணன்., குரு, எந்திரன்., பொன்னியன் செல்வன் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தார்..
தூம் 2 படப்பிடிப்பின் போது நடிகர் அபிஷேக் பச்சன் ராயை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் 2012ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படம் இவர் தமிழில் நடித்த கடைசி படம் என சொல்லலாம்..
பல ஆண்டுகள் கழித்து ஒரு கம்பேக் படமாக பொன்னியன் செல்வன் அமைந்தது என சொல்லலாம்..
எத்தனை படங்கள் இவர் நடித்திருந்தாலும்.., ஐஸ்வர்யா ராய் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது..
“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்.. அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்து தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி…
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி…”
இந்த பாடலும் ராவணனன் படத்தில் வரும்
“இந்த பூமியில எப்போ வந்து நீ பொறந்த….
உசுரே உசுரே போகுது.. உசுரே போகுது உதட்டை நீ வந்து சுழிக்கையிலே..” என்ற பாடல்கள் நினைவிற்கு வரும்..
உலக அழகியான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்…
ஐஸ்வர்யா ராய் என்றால் உங்களுக்கு உடனே நினைவிற்கு வரும் படம் மற்றும் பாடல் என்னவென்று கமெண்ட்டில் சொல்லுங்க..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..