தவெக மொழிக் கொள்கை..!! செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
மொழிக் கொள்கை :
தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டுக்கு எப்போதும் ஏற்ற கொள்கை.
தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி. வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்.
கீழடி மற்றும் கொந்தகை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, பழந்தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை வழங்கப்படும்.
விடுதலை நாள் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, தமிழ் மண்ணில் இருந்து சாதி, மத, இன, மொழி பேதமின்றி. விடுதலைக்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் “பொதுப் புகழஞ்சலி” செலுத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும். என விஜய் கூறியுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..