சட்டத்திற்கு புரம்பாக செயல்படும் அவர் பதவி விலக வேண்டும்..!! தலைவர் விஜய் வலியுறுத்தல்..!!
சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று.. தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் திரு ஆனந்த் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது…
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
மாநில உரிமை :
மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என தலைவர் விஜய் வலியுறுத்தல்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..