பொட்டுக் கடலை வைத்து சிம்பிள் ஸ்வீட்..!! இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
பொட்டுக் கடலை வைத்து சிம்பிள் ஸ்வீட் ரெசிபி செய்வது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
இந்த ஸ்வீட் நீங்கள் சீக்கிரமா சட்டுனு சுலபமா செய்தரலாம் வாங்க அதற்கு தேவையான பொருட்கள் பார்க்கலாம்;
தேவையான பொருட்கள் :
பொட்டுக் கடலை- 1 கப்
தேங்காய்- அரை மூடி
வெல்லம்- 1 கப்
தண்ணீர்- அரை கப்
நெய்- 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள்
உப்பு
மைதா மாவு- கால் கப்
சோடா
எண்ணெய்
செய்முறை பார்க்கலாம் :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பொட்டுக்கடலை சேர்த்து கொஞ்சமாக வறுத்துக் கொள்ளவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காய் துருவி எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து கலக்கவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அரைத்த பொட்டுக் கடலையை சேர்க்கவும். அதை நல்லா கிளர வேண்டும். அதில் வெல்ல பாகை ஊற்றி கிளரவும். பின்னர் தேங்காய் துருவல், ஏலக்காயை சேர்க்கவும். இதன் பின் மைதா மாவு, சோடா கொஞ்சம் சேர்த்து நன்கு பிசையவும்.
இப்போது இந்த கலவையை உருண்டையாக பிடித்து மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான இனிப்பு ரெடி..
இந்த மாதிரி செய்து பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..