இதெல்லாம் அதிகமாக வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..?
நம் வீட்டில் உணவிற்கு பயன்படுத்தும் உணவுபொருட்களை விலைவாசி குறைவாக இருக்கும்போது அதிகமாக வாங்கி வைக்கும் பழக்கம் மக்களிடையே பெரிதும் இருக்கிறது. இது பணத்தை சேமிக்கும் ஒரு வழியானாலும் வாங்கி வைக்கும் மருத்துவ குணங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அப்படி அதிக அளவில் வாங்கி வைக்கக்கூடாத உணவு பொருட்களை பற்றி பார்போம்.
மசாலா பொருட்கள்:
வீட்டு சமையலறையில் மிகவும் முதலிடம் பிடிப்பது மஞ்சள், மிளகு, ஸோம்பு, சீரகம் போன்ற மசாலா பொருட்களாகும். இத்தகைய பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் தன் மருத்துவ குணங்களை பெற்றிருக்கும் அதனால் அத்தகைய பொருட்களை அதிகமாக வாங்கி நீண்ட நாட்களுக்கு சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்:
உணவுபொருட்களில் மிகவும் முக்கியமானதும் அத்தியாவசியமானதும் பால் வகையை சார்ந்த வெண்ணெய், நெய், பால், பாலாடை, பன்னீர் ஆகிய பொருட்களாகும். இந்த வகை பொருட்களின் ஆயுள் குறைவாகவே இருக்கும். உங்கள் வீட்டில் தேவைப்படும் என்பதற்காக அதிகமாக வாங்கி சேமித்து வைக்க கூடாது. மாற்றாக தேவைப்படும்போது புதிதாக வாங்கும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.
சமையல் எண்ணெய்:
சமையலுக்கு பயன்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலை மடமடவென ஏறிக்கொண்டு தான் போகிறது அதற்காக அதனை அதிகமாக வாங்கி சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. சமைப்பதற்காக ஒன்று முதல் இரண்டு லிட்டர் வரை மட்டுமே வாங்கி வைக்க வேண்டும்.
காய்கறி,பழங்கள்:
சில நேரங்களில் தக்காளியின் விலை மலையை போல உயரும். அந்த சமையங்களில் அதிகமான விலை விற்கப்படுகிறதே என்பதற்காக தக்காளியை முன்பே வாங்கி அதிகமாக சேமிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ள கூடாது, காரணம் காய்கறி மற்றும் பழங்களை புதிதாக வாங்கி சாப்பிடும்போது தான் அதன் ஆரோக்கியம் நமக்கு கிடைக்கும்.
பேக்கேஜ் செய்த பொருட்கள்:
பாக்கெட்டுகளில் அடைத்து விற்க்கப்படும் பொருட்கள் எல்லாம் புதிது இல்லை, அதன் ஆயுள்காலம் அதில் குறிப்பிட்டு இருக்கும், அதற்குள் அந்த பொருட்களை சமைக்க வேண்டும் இல்லையெனில் அதனை வாங்குதல் கூடாது.
மாவுகள்:
அரிசி மாவு, கோதுமை மாவு, சோள மாவு ஆகியவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது இதனால் மக்கள் அதனை அதிகமாக வாங்கி குவிக்கிறார்கள். மாவுகள் நீண்ட நாட்களுக்கு சேமிக்கப்படுமானால் அதில் வண்டுகள், புழுக்கள் ஆகியவை அதிகரித்து மாவின் தன்மையை சீர்குலைக்கிறது. எனவே அவ்வபோது தேவைக்கு ஏற்றவாறு வாங்கி பயன்படுத்த வேண்டும்.
நட்ஸ் வகைகள்:
உலர்ந்த பருப்பு வகைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதன் விலை குறைவாக இருக்கும் சமையத்தில் அதிகமாக வாங்கி குவிக்கிறார்கள். இதனை மாதக்கணக்கில் வைக்கும்போது அதன் பயன்கள் நமக்கு முழுவதுமாக கிடைக்காது எனவே அதனை அளவாக வாங்கி வைக்க வேண்டும்.
பிரட் வகைகள்:
கோதுமை, நட்ஸ் மற்றும் சிறுதானியங்களில் இருந்து பிரட் தயாரிக்கப்படுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதால் வாங்கி குவிக்கும் பழக்கம் உள்ளது. பொதுவாக பிரட்டின் ஆயுள்காலம் சுமார் 7 நாட்கள் மட்டுமே அதனால் அதிகமாக வாங்கி சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.