“ஆள் பாதி ஆடை பாதி..” எப்பவும் ரிச் லுக்கில் தெரியனுமா…? இதை படிங்க..!!
ஸ்டைல் என்பது நாம் செய்யும் செயலில் மட்டும் அல்ல, அணியும் உடையிலும் கூட இருக்கிறது. விலை உயர்ந்த ஆடைகளை அணிவதால் மட்டும் நம் அழகு கூடி விடாது. இடத்திற்கு தகுந்தவாறு உடையை அணிய வேண்டும்.
உடைக்கு ஏற்றவாறு அணிகலன்கள், மேக்கப், காலணி அணிவது உங்களை கூடுதல் அழகாக காட்டும்.
அப்படி மற்றவர்கள் முன் நீங்கள் அழகாக தெரிய சில டிப்ஸ்கள்
நாம் உடுத்தும் சாதாரண ஆடையாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த ஆடையாக இருந்தாலும் சரி. அதற்கு ஏற்ற அணிகலன் ( Jewels, earings, Bangles, accessories ) அணிய வேண்டும்.
அப்பொழுது தான் உங்கள் அழகை உயர்த்தி காட்டும். உடைக்கு ஏற்ற அணிகலன் அணிய வில்லை என்றால், முகம் பார்ப்பதற்கு சற்று அழகு (லுக்) குறைந்த படி இருக்கும்.
உயர்ரக வைரம், தங்கம் போன்ற அணிகலன் அணிந்தால் அழகு கூடுமோ என்று நினைக்க வேண்டாம். உங்களிடம் இருக்கும் விற்கும் அணிகலனாக இருந்தால் கூட போதும்.
உதாரணமாக புடவைக்கு ஜிமிக்கி கம்மல், நெக்லஸ், அணியலாம். ஜீன்ஸ், பேண்ட்டிற்கு, வளைவி கம்மல் அணியலாம்.
நாம் எந்த உடை உடுத்த போகிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று, பலரும் அதை தேர்வு செய்வதில் குழப்பம் அடைவார்கள்.
நாம் உடுத்தும் ஆடையின் நிறம், நம் நிறத்திற்கு ஏற்றதா என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். பார்த்தவுடன் கண்களை கூசும் ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.
அப்படி கண்களை கூசும் கலரில் ஆடை அணிவது உங்கள் அழகை குறைத்து விடும். உங்களை பார்க்கும் மற்றவர்களும் முகம் சுழிப்பார்கள்.
நம்மை அழகாக காட்டுவதற்கு முக்கியமான ஒன்று மேக்கப், மேக்கப் சரியாக இல்லை என்றால். அது ஸ்டைலாக இருக்காது. ஆடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது தான் முக்கியம்.
உதாரணமாக ஜீன்ஸ் அணியும் பொழுது லைட் மேக்கப் முக்கியம். ஆடைக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல். வைப்பதும் முக்கியமான ஒன்று.