காபிதூள் கலப்படமா என கண்டுபிடிப்பது எப்படி..?
காபி தூளில் புளியங்கொட்டை தோல் கலந்திருக்கிறதா என கண்டறிய ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் காபி தூள் போட்டு வைத்து பாருங்க. தூள் மிதந்தால் அது கலப்படம் இல்லாதது தூள் அடியில் தங்கினால் அது சுத்தமானது இல்லை.
பூரி, சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும்போது அதில் கைப்பிடி அளவு கொண்டக்கடலை சேர்த்து அரைத்தால் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.
சமையலில் காரம் அதிகமாகிவிட்டால் அதில் எலுமிச்சை சாறு கலந்து வைத்தால் காரம் குறையும், சுவையும் கூடும்.
வாழை இலையில் தினமும் சாப்பிடுவோருக்கு முடி நரைக்காது. சோர்வு வராது.
தேநீரில் சில துளிகள் பன்னீர் சேர்த்து செய்ய சுவை அருமையாக இருக்கும்.
பட்டாணி வேகவைக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேகவைத்தால் நல்லா வாசனையாக இருக்கும்.
வாழைக்காய் மற்றும் கத்தரிக்காயை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டுவைக்க அது கருகாமல் இருக்கும்.
பீர்க்கங்காய் தோலை எண்ணெயில் வதக்கி துவையல் செய்ய சுவை சூப்பராக இருக்கும்.
நெய் காய்ச்சும் சட்டியில் சிறிது எண்ணெய் தேய்த்து காய்ச்சினால் சட்டியில் ஒட்டாமல் வரும்.
வேகவைத்த கோதுமை ரவையுடன் பச்சை மிளகாய், கடுகு, தயிர், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.