குளிர்காலங்களில் உதடு வெடிப்புக்கு ஏற்ற எளிய வழிகள்..!
குளிர்காலங்களில் சிலருக்கு உதடுகள் வெடித்துபோய் பார்பதற்கு அசிங்கமாக இருக்கும். அப்படி இருக்கும் உதடுகளுக்கு சில எளிய குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய், தேன்: தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்த கலவையை காய்ந்த உதடுகளில் தடவும்போது அது தகுந்த ஈரப்பதத்தை தரக்கூடியது. இரவில் படுப்பதற்கு முன் அரை ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து உதடுகளில் தடவி காலையில் கழுவி வருவதால் உதடுகள் மென்மையாகும்.
கற்றாழை ஜெல்: உலர்ந்த உதடுகளுக்கு கற்றாழையானது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சிறிது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தேய்த்து பத்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உதடுகளுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.
சர்க்கரை ஸ்கரப்: சிறிது தேங்காய் எண்ணெயில் சர்க்கரை சிறிது கலந்து உதடுகளில் லேசாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மென்மையாகும்.
தண்ணீர் அதிகம் குடித்தல்: நிறைய தண்ணீர் குடிப்பதினால் உதடுகள் ஈரப்பதமாகவும் உடலுக்கும் நீரேற்றமாகவும் இருக்கும். இதனால் வெடித்த உதடுகள் சாப்டாகவும் அழகாகவும் இருக்கும்.
வெள்ளரி துண்டு: வெள்ளரியானது கண்களுக்கு குளிர்ச்சியும் வீக்கத்தை குறைப்பது மட்டுமில்லாமல், காய்ந்த உதடுகளின் மேல் வைக்கும்போது அது ஈரப்பதத்தை தக்கவைக்கும், இதனால் உதடுகள் மென்மையாக மாறும்.