நிம்மதியான தூக்கம் வேண்டுமா..!! அப்போ இதை படிங்க முதல..!!
மன அழுத்தத்தை போக்கி நிம்மதியான தூக்கத்தை தரக்கூடிய வெட்டி வேர்களின் சிறப்புகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க..
வாசனைக்காக மட்டுமல்லாமல், தலைமுடி, சரும பாதுகாப்பில் வெட்டி வேர்கள் தரக்கூடிய நன்மைகள் ஏராளம் அதனை சுருக்கமாக பார்ப்போம்.
வேர்கள் வாசம்:
அதனால் வெறுமனே வெட்டி வேர்களாகவே இதனை வீடுகளில் பயன்படுத்தலாம். இந்த வேர்களிலிருந்து வெளிவரும் வாசமானது வீடெல்லாம் நிரம்பி கிடக்கும்.
இதை சுவாசித்து கொண்டே வரும்போது, மன அழுத்தம் நீங்கி, அமைதி பெறும்னு சொல்லப்படுது.
வெயில் காலத்தில் வெட்டி வேர்களில் செய்யப்படும் தட்டிகளை வாங்கி ஜன்னல்களில் கட்டி வைத்தாலும், அறையின் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.
சிலருக்கு வேர்க்குரு வந்தால் என்ன செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றை பொடியாக்கி பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு மறையும் என்று சொல்ராங்க..
வெயில்காலம் வந்தால் இந்த வெட்டி வேரை வைத்து என்ன செய்வது…
இந்த வெட்டி வேர்களில் பாய், விசிறி போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.
இவைகளை கோடை காலத்தில் பயன்படுத்தும்போது, உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி, குளிர்ச்சியை தருவாதக சொல்லப்படுது.
வெட்டி வேர் ஆயில் :
இதற்கு ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, இந்த வெட்டி வேர்களையும் அதில் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
பிறகு 2 நாட்களுக்கு இதனை அப்படியே வைத்துவிட வேண்டும். வெட்டிவேரில் தேங்காய் எண்ணெய் நன்றாக ஊறிவிடும்.
பிறகு 3வது நாள் இந்த எண்ணெய்யை மட்டும் வடிகட்டி வைத்து கொண்டால் போதும்..
கால் வலி, மூட்டு வலி, சருமத்தில் வேறு எந்த தொந்தரவு இருந்தாலும் இந்த எண்ணெய்யை பூசி வரலாம்.
பலநாட்கள் ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தாலும், அவை விரைவில் மறைந்துவிடும்னு சொல்லப்படுது
முகத்திலுள்ள பருக்கள், சிறு சிறு கொப்புளங்களும் மறைந்துவிடும் என்று சொல்லிகிறார்கள்.
இந்த மாதிரி வெட்டிவேர்களில் நிறைய நன்மைகள் இருக்கு இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..