உயர்நீதிமன்ற தேர்வு எழுதுபவர்கள் கவனதிற்கு..! இதை தெரிஞ்சுக்க மறக்காதீங்க..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நகல் எடுப்பவர் மற்றும் அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி.. பணிகளுக்கு வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறவுள்ளது..
இந்த தேர்வில் எந்த மாதிரியான விடைத்தாள் இருக்கும்.., எது போன்ற கேள்விகள் கேட்கப்படும்.., தேர்விற்கு செல்லும் தேர்வாளர்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பது பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
கடந்த மே 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நகல் எடுப்பவர் மற்றும் அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி போன்ற காலி இடங்களின் வேலைக்கு விண்ணம் செய்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டு இருந்தது அதில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர்..,
தற்போது நவம்பர் 10ம் தேதி நகல் அட்டெண்டர் மற்றும் அலுவலகம் உதவியாளர்.. பணிக்கும்..
துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி பணிகளுக்கான தேர்வு நவம்பர் 11ம் தேதியும் நடைபெறவுள்ளது..
அதற்கான தேர்வு நுழைவு சீட்டு ( Hall Ticket ) இணையதளத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.., அதனை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள லிங்க் www.mhc.tn.gov.in/recruitment/downhallticket என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்..
www.mhc.tn.gov.in/recruitment/downhallticket லிங்கை க்ளிக் செய்தவுடன் மேற்கண்ட படத்தில் இருப்பது போல உங்களுக்கு தோன்றும் அதில் உங்கள் Application எண், Email Id ( Register Id ) D.O.B மற்றும் கடவு எண் (Captch) கொடுத்து enter செய்தால் தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் ஆகி விடும்..
ஒரு சிலருக்கு உங்களின் பதிவு எண் அல்லது Register எண் மறந்திருக்கும் அவர்கள் இந்த இணையதள mhc.tn.gov.in/recruitment லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்யவும்..
உங்களின் ரெஜிஸ்டர் எண் என்று சொல்லப்படும் Gmail id மற்றும் PassWord கொடுத்து உள்ளே சென்றால் உங்களின் பதிவு எண் தெரிந்துக்கொள்ளலாம்..,
* தேர்வு எழுதும் நபர், தேர்வு அறைக்கு செல்லும் முன் “ஸ்மார்ட் வாட்ச்” மற்றும் “ஸ்மார்ட் போன்” கொண்டு செல்ல அனுமதி கிடையாது..
* மற்றும் தேர்வு அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு செல்பி எடுக்க அனுமதி கிடையாது..,
* நண்பர்களுடன் ஆலோசிப்பது அரட்டை அடிப்பது செய்யக்கூடாது..,
* தேர்வு அறைக்குள் செல்லும் முன் துண்டு பிரசுரங்கள், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதியில்லை..,
* தேர்வு தாளில் நீல மை கொண்ட பெண்ணில் மட்டுமே எழுத வேண்டும்..,
* தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு.., டிக் செய்யக்கூடாது, உங்களுக்கு தெரிந்த பதிலை வட்டமிட்டு காட்ட வேண்டும்..,
* தேர்வு கால அளவு 2:30 நிமிடம் என்பதால் அதற்கு முன் முடித்தால் தேர்வு அறைய விட்டு வெளியே வரக்கூடாது..,
* ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ தேர்வு கண்காணிப்பாளரிடம் மட்டுமே முறையிட வேண்டும்..,
* எந்த ஒரு பதிலையும் குறிப்பிடும் போது பார்த்து குறிப்பிட வேண்டும், தவறுதலாக வட்டமிட்டு பின் அவற்றை அடித்து கிறுக்க கூடாது..
இதன் மதிப்பு 50 முதல் 100 மார்க்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.., நீங்கள் பதிவு செய்துள்ள துறையை பொறுத்து கேள்விகள் கேட்கப்படும்..
OFFICE ASSISTANT :
50 மார்க் மட்டுமே கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்கும்..,
OTHER POSITING :
100 மார்களுக்கு கேட்கப்படும் முதல் 10 கேள்விகள் ஆங்கிலம், அடுத்த 10 கேள்வி தமிழ், அடுத்த 10 கேள்வி கணிதம், மீதமுள்ள கேள்விகள் அறிவியல் மற்றும் பொது அறிவு சம்மந்தமான கேள்விகள்.., கடைசியில் உள்ள இந்த கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும்.
100 மார்களுக்கு கேட்கப்படும் இந்த கேள்வி தமிழில் மட்டுமே இருக்கும்..,
100 மார்களுக்கு கேட்கப்படும் முதல் 10 கேள்விகள் ஆங்கிலம், அடுத்த 10 கேள்வி தமிழ், அடுத்த 10 கேள்வி கணிதம், மீதமுள்ள கேள்விகள் அறிவியல் மற்றும் பொது அறிவு சம்மந்தமாக இருக்கும் ஆனால் அதிலும் நிறைய கணிதம் சம்மந்தமான கேள்விகளே கேட்கப்பட்டிருக்கும்..
இதுபோன்ற பல அப்டேட்கள் பற்றி தெரிந்துக்கொள்ள என்றும் நம் மதிமுகம்-உடன் இணைந்திடுங்கள்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..