கண் கலங்கிய பிக்பாஸ் ரசிகர்கள்..!! அப்படி சத்யா என்ன சொன்னாங்க..?
பிக் பாஸ் சீசன் 8 பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் வைல்ட் கார்ட் என்ட்றியாக பிரபலங்கள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் டாஸ்க்கிங்ல் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவத்தை கூற வேண்டும்.
அந்த டாஸ்க்கில் பேசிய சத்யா ஐந்து வயதிலேயே என் அப்பா அம்மா பிரிந்து விட்டார்கள் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால் போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்.
அங்கு தான் ஒரு பெண்ணை காதலித்தேன் கல்லூரி செல்லும்வரை எங்கள் காதல் தொடர்ந்தது. ஒரு நாள் என் காதலி என்னிடம் சொல்லிவிட்டு ஒரு இடத்திற்கு சென்றாள். ஆனால் அங்கு சிலர் அவரை பாலியல் தொல்லை செய்து அவளைக் கொன்று ரயில்வே டிராக்கில் தூக்கிப்போட்டு சென்று விட்டார்கள்.
அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஐந்து முறை தற்கொலை முயற்சி செய்தேன் அதன் பின் சினிமா தான் எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்தது. என் பெற்றோர் காதலி என அனைவரும் என்னை விட்டு சென்று விட்டனர்.
அதன் பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது. அதுதான் என் மனைவி ரம்யா என உருக்கமாக பேசியிருந்தார். சத்யாவின் இந்த கதையானது சகப் போட்டியாளர்கள் ரசிகர்கள் என அனைவரையுமே கலங்க செய்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..