இதய நோயால் ஏற்படும் பிரச்சனை…!! இதை சாப்பிட்டால் போதும்..!!
தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் இந்த பதிவில் பார்க்கலாம்
முந்திரி பருப்பில் கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. மன அழுத்தத்தை குறைத்து மனநலையை மேம்படுத்து உதவுகிறது.
வைட்டமின் ஈ சருமத்தை பாதுகாத்து வயதாகும் தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.
அதே வேளையில் இதில் அதிக கலோரி உள்ளதால் அதிக அளவில் சாப்பிட உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
உவமை பிரச்சனை உள்ளவர்கள் முந்திரி சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இதில் ஆக்சிலேட் அதிகமாக உள்ளதால் சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
அதேமாதிரி உள்ள டைரமைன் மற்றும் பைனிலெதிலமைன் அமிலங்கள் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம்
ஆரோக்கியமான நபர் தினசரி 30 கிராம் முந்திரி சாப்பிடுவது பாதுகாப்பானதாகும். உடல்நிலை வயது மற்றும் பிற காரணிகளை பொறுத்து இந்த அளவு மாறுபடக்கூடும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..