தேன் தினமும் சாப்பிடுவது நல்லதா..? அதை சரி செய்யுமா..?
தேன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
இயற்கை நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் கலந்த வரம் தேன் பழங்காலத்தில் இருந்தே மருத்துவர் ரீதியில் தேனின் பயன்பாடு உள்ளது..
நுண்கிருமிகளை எதிர்த்து போராடும் இதன் வீரியம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பின்னுக்கு தள்ளியதும் உண்டு. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி புதிய செல்களை உருவாக்க தேன் உதவுகிறது.
கிருமிகளால் ஏற்படும் நச்சு தன்மையும் வெளியேற்றும். செரிமான மண்டலத்தில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகவதற்கும், இரைப்பை புண், மலச்சிக்கல் போன்ற சரி செய்யும் திறன் தேனுக்கு உள்ளது.
பசியை தூண்டும் கிரெலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க செய்யும். நல்ல தூக்கத்தை தரும் மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்க செய்யும்.
கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது கேன்சர் செல் வளராமல் தடுப்பது ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது என்று பல வியப்பான பலன்கள் தேனுக்கு உள்ளது.
இருப்பினும் வெகு அபூர்வமாக சிலருக்கு தேன் சாப்பிடுவதால் ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும்.வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், சீரற்றஇதய துடிப்பு ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் 15 முதல் 30 மில்லி தேன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்…
மேலும் தேன் ஆரோக்கிய குணம் மட்டுமின்றி மருத்துவ குணங்களும் அதிகம் கொண்டுள்ளது… என சொல்லலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..