கங்குவா படத்தின் மீது வழக்கு..!! நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் தான் கங்குவா.
இப்படம் பெரும் பொருட் செலவில் தயாராகி பான் இந்தியா படமாக அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 99 கோடியே 22 லட்சம் ரூபாயில் இன்னும் தர வேண்டிய 55 கோடியை திருப்பி வழங்காத காரணத்தால் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தது.
அது மட்டுமல்ல தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் 18 கோடியை தந்து விட்டார்கள்.
எனவே தங்களான் படத்தின் ஓடிடி வெளியிட்டிருக்கு ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் ஸ்டுடியோவில் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீதமுள்ள தொகையை நாளை வழங்குகிறோம் என கூறினார். இதை அடுத்து நாளை வழக்கை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி நாளை மதியத்திற்குள் பணம் வழங்கப்பட்டு விட்டால் கங்குபா படம் நவம்பர் 14ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் இல்லையென்றால் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டிவரும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..