தினம் ஒரு கீரை சாப்பிட்டால்..! இந்த பிரச்சனை வரவே வராது..!!
தினம் ஒரு கீரையை மருத்துவர்கள் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்ன அதேமாதிரி இரவு நேரங்களில் கீரைகளை சாப்பிட கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள் இதற்கும் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…
கீரைகளில் நார்சத்துகள் அதிகமாக நிறைந்திருப்பதால் கண் பார்வைக்கும் நல்லது. எனவே தினசரி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரைகள் :
எந்த கீரை நல்லது என்று சொல்ல முடியாது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் நிறையவே உள்ளன.
இதனால் ரத்த சோகை நீங்குகிறது. அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம்னு சொல்லுராங்க..
மேலும் சர்க்கரை நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்த கீரை உதவும்.
அது மட்டும் இல்லாமல், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கீரைக்கு உண்டு
நார்ச்சத்துக்கள் :
நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால், கல்லீரல் மற்றும் பெருங்குடலில் இருந்து நச்சுகளை அகற்ற கீரைகள் பேருதவி புரிகின்றன
கீரைகள் சாப்பிடும்போது சிலருக்கு உபாதைகள் ஏற்படலாம். காரணம் இந்த கீரையில் அதிகமாக காணப்படும் ப்யூரின், நம் உடலில் யூரிக் அமில அளவை அதிகரித்து விடும்.
இதனால் மூட்டுவலி, முழங்கால் வலி ஏற்பட்டுவிடும். எனவே, யூரிக் அமில அளவு ஏற்கனவே அதிகமாக உள்ளவர்கள் கீரையை தவிர்க்கலாம்.
அதேபோல, கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் சிலருக்கு சிறுநீரக கற்களை உண்டாக்கிவிடும். அதனால் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்களும் கீரைகளை தவிர்ப்பது நல்லது.
பச்சையம் :
பெரும்பாலும் இரவு நேரத்தில் கீரைகளை சாப்பிடக்கூடாது என்கிறார்கள் இதற்கு காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும் என்று சொல்லப்படுகிறது.
எனவே, இந்த கீரையை சாப்பிடும்போது, மந்த நிலைமை ஏற்பட்டுவிடும். அதிக கலோரிகளும் உள்ளதால், எளிதில் ஜீரணமாகாது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..