போர்வைகளை சூரிய ஒளியில் உலர்த்துவது ஏன்…? அறிவியலும் ஆரோக்கியமும் -1
போர்வைகளை ஏன் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
நாம் தினசரி பயன்படுத்தும் போர்வைகளை சூரிய ஒளியில் உலர்த்தி எடுத்து வைப்பதன் நன்மை மற்றும் தீமை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சூரிய ஒளியின் யூவி கதிர்கள் கண்ணுக்கு தெரியாத கிருமி பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
அந்த வகையில் உங்கள் போர்வைகளை சூரிய ஒளியில் உலர்த்துவது கிருமித் தொற்றின் அபாயத்தை குறைக்கும். குளிர்ச்சியான சூழலில் முடங்கி இருக்கும் போர்வைகள் ஒருவகை ஒவ்வாமை வாடை பெறுகின்றன குறிப்பிட்ட இந்த ஒவ்வாமை வாடையை விரட்ட சூரிய ஒளி நமக்கு உதவி செய்யும்.
போர்வைகளை குளிர்ச்சியான சூழலில் வைத்திருப்பது மாசு பூச்சிகளின் தேக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே சூரிய ஒளியின் போர்வைகளை நன்கு உணர்த்துவது இந்த பூச்சிகளை அழித்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுது.
குளிர்காலத்தில் உங்கள் போர்வையில் தங்கும் பூஞ்சைகளை அழிக்க ஒரு சிறந்த வழியாக சூரிய ஒளி பார்க்கப்படுகிறது. அதாவது சூரிய ஒளியில் இந்த போர்வைகளை உலர்த்தும்போது போர்வையில் தங்கும் பூஞ்சைகளை முழுவதுமாக அழிக்கலாம்.
சூரிய ஒளியின் போர்வைகளை உலர்த்தும்போது உண்மையில் எடை குறைவது இல்லை ஈரப்பதத்தால் கூடும் எடையை தடுக்கிறது அந்த வகையில் அதன் எடையை கட்டுக்குள் வைத்து முழுமையான உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
நிபுணர்கள் கூற்றுப்படி உங்கள் போர்வைகளை வாரம் ஒரு முறையேனும் சூரிய ஒளியில் உணர்த்துவது அவசியம். சூரிய ஒளியில் இந்த போர்வைகளை உணர்த்தும்போது கிருமி தொற்றுகளை தடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் நாம் பெறலாம்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..