பட்டுபுடவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதிதாக இருக்க இதை செய்ங்க..!
பெண்களுக்கு எவ்வளவு வகையான துணி வகைகள் இருந்தாலும் புடவையை பிடிக்காத நபர்களே இல்லை. அதிலும் பாரம்பரியமான புடவையை அணிவது மிகவும் அழகாவும் இருக்கும். அந்தமாதிரி புடவையை விரும்பாத நபர்களே இல்லை.
பாரம்பரிய பட்டு புடவையை எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் புதிதுபோல அப்படியே வைத்திருக்க சிலவகை வழிகளை பற்றி இந்த பார்போம்.
வாசனை திரவியம் அடிப்பது:
சிலர் வாசனை திரவியம் நீண்ட நேரத்திற்கு நம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக அணிந்திருக்கும் துணியில் அதிகமாக அடிப்பார்கள்.
அதுபோல வாசனை திரவியம் அடிக்கும்போது பட்டுப்புடவை அணிந்திருக்கும்போது வாசனை திரவியத்தை சற்று தூரமாக வைத்து அடிக்க வேண்டும். காரணம் திரவியத்திலிருக்கும் கெமிக்கல் பட்டு புடவையை டேமேஜ் செய்யும்.
நாப்தலில் உருண்டை:
துணிகள் வைக்கும் அலமாரியில் பூச்சுகள் மற்றும் வண்டுகள் வராமல் இருக்க நாப்தலின் உருண்டைகளை வைக்கலாம், இதனால் துணியும் வாசனையாக இருக்கும்.
ஆனால் இந்த நாப்தலின் உருண்டையை பட்டுபுடவை வைக்கும் உருண்டையில் வைக்கக் கூடாது.
கவரில் வைத்தல்:
பட்டுபுடவைகளை அப்படியே அலமாரியில் வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து அலமாரியில் வைக்கலாம்.
பிளாஸ்டிக் கவரில் அப்படியே புடவையை வைக்காமல் ஒரு காட்டன் பேகில் வைத்து பின் கவரில் வைக்கலாம்.
காற்றில் உலர வைத்தல்:
பட்டுபுடவையை நீண்ட நாட்களுக்கு அப்படியே மடித்தே வைக்க கூடாது. நீங்கள் புடவையை கட்டினாலும் கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது எடுத்து உலரவைத்து மடிப்புகளை மாற்றி மடித்து பின் அலமாரியில் வைக்க வேண்டும்.
தாராளமான இடத்தில் வைத்தல்:
பட்டுபுடவையை மற்ற துணிகளோ புடவைகளோ வைக்கும் இடத்தில் அடைத்து வைக்க கூடாது. மாற்றாக நல்லா காலியான இடமுள்ள இடத்தில் வைக்க வேண்டும்.