வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கொண்டாட்டம்…!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
கன்னியாகுமரியின் புகழ்பெற்ற வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலைக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி வெள்ளி விழா கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது. சாதி, மதம் மற்றும் பேதங்களைக் கடந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொல்லிய திருவள்ளுவர்., ஆனால் ஒரு கும்பல் அவருக்கு காவி நிறம் பூச நினைக்கிறது., திருவள்ளுவர் எல்லோருக்கும் சமமானவர்.. அவர்களுக்கு குமரியில் சிலை அமைத்து 100 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை போற்றும் விதமாக வெள்ளிவிழா கொண்டாட இருப்பதாகவும் தமிழர்களின் அடையாளம் என போற்றும் விதமாகவும் வருகின்ற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அன்றைய நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..