கேரளா ஃபேமஸ் நெய் சோறு…!! இதை ட்ரை பண்ணி பாருங்க..!! அப்புறம் உங்க குக்கிங்…!!
கேரளா ஃபேமஸ் நெய் சோறு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
முதலில் இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நெய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு 15
வெங்காயம் 2
பிரியாணி இலை 2
ஏலக்காய் 3
நட்சத்திர சோம்பு 1
இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
பாஸ்மதி அரிசி 2 கப்
செய்முறை :
கடாயில் நெய் முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுக்கவும். பின் அதே கடாயில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும் அதன் பிறகு அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கிய பின்பு கழுவி வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும் . பின்னர் இரண்டு டம்ளர் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து கிளறி வேக வைக்கணும்.
சாதம் நன்றாக வெந்ததும் கொஞ்சம் நெய் ஊற்றி வறுத்து வைத்த முந்திரி வெங்காயம் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான நெய் சோறு ரெடி சிக்கன் கறிக்கு அட்டகாசமாக இருக்கும்..
ட்ரை பண்ணி பாத்துட்டு எப்படி இருந்தது என்று கருத்துக்களை பதிவு பண்ண மறக்காதீங்க…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..