கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய 5 வகை பிரா..!
பெண்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். முன்பு பெண்கள் புடவை மட்டுமே பயன்படுத்தினார்கள் அப்போது ஒரே வகையில் தான் பிரா இருந்தது, அதற்கு பின் சுடிதார் அறிமுகமானது அதற்கும் பெண்கள் அதே வகை பிரா தான் பயன்படுத்தினார்கள். அதற்கு பிறகு ஷர்ட், டீ ஷர்ட், லெஹங்கா, மேக்ஸி ஆகிய விதவிதமான ஆடை வகைகள் வந்துவிட்டது.
இந்தவகை அனைத்து ஆடைக்கும் ஒரே விதமான பிரா பொருந்துவது இல்லை எனவே அனைத்து வகை ஆடைக்கும் பொருந்தும் விதமான 5 வகை பிரா வைத்துக் கொள்வது சிறந்தது. அவை என்னவென்று பார்க்கலாம்.
புல் கவரேஜ் பிரா ( Full coverage bra): இந்தவகை பிரா அனைத்து உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இதை அணிவதற்கும் வசதியாக இருக்கும்.
டீ ஷர்ட் பிரா ( T-shirt bra): பெண்கள் டீ ஷர்ட் அணியும்போது பிரா மட்டும் தனியாக தெரிவது போல உணர்வது வழக்கம். இதை தவிர்க்க தான் தனியாக டீ ஷர்ட் பிரா என்பது வந்தது. இது அணிவதற்கு சிறப்பாக இருக்கும்.
ப்ளங் பிரா ( Plunge bra): இந்தவகை பிரா கழுத்து V வடிவில் இருக்கும் ஆடைகளுக்கும், கழுத்து பகுதி சற்று கீழ் இறங்கி இருக்கும் ஆடைகளுக்கும் பயன்படுத்தலாம்.
கம்பி பிரா ( WIred bra): இந்தவகை பிரா அனைத்து ஆடைகளுக்கும் பயன்படுத்தலாம். இது மார்பகத்தை சற்று சீரான அமைப்பில் காண்பிக்கும்.
புஷ்-அப் பிரா ( Pushup bra): இந்தவகை பிரா மார்பகத்தை தனித்து காட்டும். இது மேக்ஸி போன்ற ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
இந்த ஐந்து வகை பிரா ஒவ்வொரு பெண்களிடமும் கட்டாயம் இருக்க வேண்டியது. நாம் அணியும் உடை அழகாக தெரிய வேண்டுமெனில் அதற்கு உள்ளாடை தேர்வு மிகவும் அவசியம்.