மருத்துவருக்கு கத்திகுத்து…!! துணை முதலமைச்சர் உதயநிதி அளித்த உறுதி..!!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜி பணியில் இருந்த போது அங்கு மருத்துவம் பார்க்க சென்ற இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காயம்பட்ட மருத்துவர் பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மருத்துவr பாலாஜியை பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தற்போது அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது…
கைது செய்யப்பட்டுள்ள பாலாஜியின் தாயார் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவர் பாலஜியிடன் சிக்சைகாக வந்து செல்கிறார்.. இதற்கிடையே தன் தாயின் சிகிச்சைகள் குறித்து பலமுறை மருத்துவர் பாலாஜியை சந்தித்துக் கேட்டுள்ளார். அப்படி இருக்கையில் திடிரென இளைஞர் இப்படி நடந்துக்கொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..