இந்த ஒரு பொருள் உங்க உணவில் சேர்த்து பாருங்க…! உங்க உடலும் முகமும்…!
சப்பாத்தியில் இந்த ஒரு பொருள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
என்னதான் நமது இந்தியர்களுள் பெரும்பாலானோர் அரிசி சாப்பாட்டினை சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தாலும் அதே அளவிற்கு சப்பாத்தியையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நீரழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க நினைப்போர் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியோர் வரை அனைவருமே இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகிறார்கள்
நெய் என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை கொடுக்க கூடியது. அதனால் இதனை பச்சிளம் குழந்தைகளுக்கு கூட இதனை உணவில் சேர்த்து கொடுக்கிறார்கள். இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்நிலையில் தினமும் சப்பாத்தி சாப்பிடுவோர் அதனை சுட்டு எடுத்தவுடன் பலரும் அதில் நெய் தடவி வைத்து பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது பாரம்பரிய சமையல் முறை சப்பாத்திக்கு சுவையினை கூட்டம் என்று கூறப்பட்டாலும் இப்படி சப்பாத்தியை நெய் தடவி சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
நெய்யில் ப்யுட்ரேட்டின் கூறு உள்ளது. அது நமது குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பெரும் பங்குனி வகிக்கிறது. இது குடல் சுவரை வலுவாக்கி குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. நெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே உள்ளிட்டவை நிறைந்துள்ளது.
இதனை நாம் உட்கொள்ளும் நிலையில் செரிமான அமைப்பு பலமாகி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது மேலும் உடலின் ஆற்றலை பராமரிக்கவும் இது உதவுகிறது. நெயில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை மட்டும் தக்க வைத்துக் கொள்கிறது என்னைக்கு பதிலாக இதனை சப்பாத்தியில் தடவி சாப்பிடுவதன் மூலம் ஆற்றல் அதிகரிக்கும்.
சப்பாத்தியின் மீது நெய் தடவாத பட்சத்தில் சப்பாத்திகள் வறண்டு போய் சுவை இல்லாமல் ஆகிவிடும். அதுவே நாம் இதில் நெய் தடவினால் மென்மையாக இருப்பதோடு சப்பாத்திக்கு கூடுதல் சுமையை கொடுக்கும். இதில் இருக்கும் வைட்டமின் k2 எலும்புகளின் ஆரோக்கியம் வலுவாவதோடு உடலின் இயக்கத்தையும் இது ஆதரிக்கிறது.
நெயில் அதிக அளவு வைட்டமின் ஈ, ஆன்ட்டி ஆக்சிடெடுன்ட்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் இதில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மையும் இதில் இருக்கிறது.
நெயில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சருமத்தை நீரேற்றம் ஆக வைத்துக் கொள்வதோடு இளமையான தோற்றத்தையும் கொடுக்கும் தோளில் ஏற்படும் சுருக்கங்கள் எரிச்சல் வெளியிட்டவை குணமாகி சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்