அமெரிக்காவின் புதிய தேசிய உளவுத்துறை இயக்குனர் நியமனம்..!
அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது., அதில் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஷ் போட்டியிட்டனர். கமலா ஹரிஷ் 210 மாகணங்களில் (5,82,27,845) வாக்குகள் பெற்றுள்ளார்.. டொனால்ட் டிரம்ப் 230 மாகணங்களில் 6,25,21,681 வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸை விட டொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதை தொடர்ந்து, துறை ரீதியாக பணியாற்ற வேண்டிய தலைவர்களின் பெயரை அறிவித்து வருகிறார். அந்த வகையில், முன்னாள் எம்.பி. துளசி கபார்டை தற்போது தேசிய உளவுத்துறையினர் இயக்குனராக நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் ”தன்னோடு இதற்கு முன் பணியாற்றிய முன்னாள் எம்.பி லெப்டினன்ட் கர்னல் துளசி கபார்டு தற்போது தேசிய புலனாய்வு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்றும் இதனை அறிவிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவதாகவும்., இதுவரையில் துளசி கபார்டு 2 தசாப்தங்களாக தமது நாட்டிற்காக போராடியுள்ளதாகவும்” அவர் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..