படம் எப்போ சார் வரும்..? ரசிகர்கள் கேள்வி..! படக்குழு சொன்ன பதில்..!!
பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் வணங்கான்..
பிரபல பலம் பெரு நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்., ஆனால் இவரின் முதல் படம் அந்த அளவிற்கு இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை என சொல்லலாம்.. அதன் பின் எத்தனையோ படங்கள் இவர் தமிழ் தெலுங்கு என நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் அதிலும் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு வெற்றி என சொல்லலாம். அதன் பின் தமிழ் சினிமாவில் இருந்து சில காரணங்களால் இவர் விலகி இருந்தார்.. கம் பேக் என்றால் என்னுடைய கம்-பேக் இப்படி தான் என சொல்லும் படி..
2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தில் விக்டர் என்ற கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தமிழ் சினிமாவின் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா..
தற்போது இவர்கள் இணைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் வணங்கான். இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில் ரோசினி பிரகாஷ் நாயகியாக நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ரிலீஸ் தேதி இதுவரை படக்குழு தரப்பில் இருந்து ஆரம்பிக்கவில்லை., படத்தின் டீசர் வெளியாகி ஒரு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்காததால் கடுப்பான ரசிகர்கள்.. “ஹலோ இயக்குனர் பாலாவா படம் எப்போ சார்.. வரும்..? என கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..