இந்தியாவில் வடமாநிலங்களில்சராசரி அளவை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த 4 மணிநேரத்தில் உத்திர பிரதேசத்தில் குளிரால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிபொழிவின் அளவு அதிகரித்துள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்திரபிரதேசம் மற்றும் இமயமலை ஒட்டியுள்ள மாநிலங்களில் பனி பொலிவின் அளவு அதிகமாக உள்ளது. அதீத பனிபொழிவாள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக ஓரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், உத்திர பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டு வரும் கடும் குளிர் காரணமாக பலரும் உடல்நலம் குன்றியும் சிலர் குளிரால் உயிரிழந்து வருகின்றனர். அதீத குளிர் தாக்கத்தால் 25 பேருக்கு மூளை சாவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.