ஜி20 மாநாடு..!! பிரதமர் மோடி பங்கேற்பு..!! அடுத்த 3 நாள் சுற்று பயணம்…?
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்று உள்ளார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கி உள்ளதாகவும். இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் உடன் ஆலோசனைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜி20 மாநாட்டை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் இருந்து கயானாவிற்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..