திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு….!! 44 ஊழியர்கள் பணி நீக்கம்…?
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை உடனடி பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதகாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பதி என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இப்படி புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்புகள் மற்றும் விலங்கின் எண்ணெய்கள் கலந்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அது சர்ச்சையை கிளப்பியது அதன் பின்னர் லட்டுவை ஆய்வகத்திற்கு எடுத்து சென்று உறுதி செய்யபட்டு தற்போது மாற்று நெய்கள் மூலம் லட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. இந்த சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில் தற்போது தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது.
அதில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்து மதம் அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, இந்து மதத்தினர் மட்டுமே தேவஸ்தானத்தில் பணியாற்றுவார்கள் என்றும் பிற மதத்தை சேர்ந்த 44 ஊழியர்களை உடனடி பணி நீக்கம் செய்து ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஊழியர்கள் திடிரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அடைய செய்த்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..