காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்க இதை செய்ங்க..!
உப்புமா தாளித்து உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிய பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி கிளறினால் நல்லா வாசனையாக இருக்கும்.
ஆட்டுக்கால் குடல் வேகவைக்கும்போது அதோடு தேங்காய் ஓடு போட்டு வேகவைக்க குடல் நன்றாக வெந்துவிடும்.
காய்கறிகளை ஈரத்துணியால் மூடி வைக்க நீண்ட நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
கோதுமை உப்புமா மற்றும் அரிசி உப்புமாவில் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
மோர் மிளகாய் போடும்போது மோரில் உப்பு மற்றும் வெந்தயத்தை அரைத்து கலந்து பின் பச்சை மிளகாயை ஊறவைக்க ருசியாக இருக்கும்.
வெள்ளை எள் மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொண்டு புளியோதரையில் சேர்க்க நல்லா ருசியாக இருக்கும்.
இட்லி மாவு நீர்த்து போய்விட்டால் அதில் சிறிது ரவையை கலந்து சுட்டால் இட்லி பூ போல இருக்கும்.
கொதி வந்த சூடான நீரில் வாழைக்காயை போட்டு சிறிது நேரம் கழித்து சிப்ஸுக்கு சீவினால் தூள் தூளாக விழாமல் வரும்.
கொழுக்கட்டைக்கு அரிசி மாவு இடிக்க முடியாத நிலையில் மைதாவை ஆவியில் வேகவைத்து உதிர்த்து கொழுக்கட்டை செய்யலாம்.
பட்டுப்புடவையில் எண்ணெய் கறை இருந்தால் அதில் கடலை மாவினை பூசி ஊறவைத்து அலச எண்ணெய் கறை நீங்கிவிடும்.
மிக்ஸியில் சட்னி அரைக்கும்போது முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்காமல் கடைசியாக நீர் ஊற்றி அரைக்க வேண்டும்.