பாகற்காயில் கசப்பு தெரியாமல் சமைக்க இதை ட்ரை பண்ணுங்க..!
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் கைப்பிடி சாதம் சேர்த்து அரைத்து இட்லி தோசை சுட்டால் அருமையாக இருக்கும்.
அவரைக்காய் பொரியலில் மிளகுத்தூள் சேர்ப்பதற்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.
ரசம் செய்யும்போது அதில் சிறிது புதினா இலைகளை சேர்த்து அரைத்து செய்தால் வாசனையாக இருக்கும்.
பச்சை மிளகாயுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கண்ணாடி பாட்டலில் வைக்க நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
உளுத்த வடை செய்யும்போது அந்த மாவில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து சுட்டால் சூப்பராக இருக்கும்.
இட்லி மாவில் ஒரு வெற்றிலையை போட்டு வைக்க சீக்கிரம் புளிக்காது.
மோர்குழம்பில் பச்சை மிளகாயை வதக்கி அதில் சேர்க்க அதன் நிறமும் ருசியும் சூப்பராக இருக்கும்.
பாகற்காயை நறுக்கி அதில் உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் வைத்திருந்து பின் நீரில் அலசி சமைத்தால் அதன் கசப்பு தெரியாது.
லட்டு செய்யும்போது சர்க்கரைக்கு பதில் கற்கண்டு சேர்த்து செய்தால் நீண்ட நாட்களுக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.
நமத்து போன பிஸ்கட்டை பொடித்து அதில் பால் சேர்த்து கலந்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்தால் சிம்பலான கேக் ரெடி.