பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்…!! ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…!!
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒன்றிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள், குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என்றும் சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் அதற்குப் பதிலாக, சமூகநீதி அடிப்படையிலான சாதியப் பாகுபாடற்ற அனைத்துக் கைவினைக் கலைஞர்களுக்கும் முழு ஆதரவளிக்கும் விரிவான திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..