”இருமுடிக்கட்டு சபரி மலைக்கு..” கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்..! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை…!!
சபரிமலையில் பரவலாக கனமழை. கொட்டும் மழையிலும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம். மழையில் நனைந்த படியே வரிசையாகச் சென்று சாமி தரிசனம்.
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த வருடத்தை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒருசில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தையும் தாண்டியது.
கடந்த இரு தினங்களாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்கள் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதாலும், இன்று வரை வார விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் புயல், கனமழை தாக்கம் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பம்பையில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் தாக்கம் கேரளாவிலும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சபரிமலையில் கனமழை பெய்யத் தொடங்கியது. இன்று மாலை வரை கனமழை விட்டுவிட்டு பெய்த போதும் கனமழையிலும் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் நேற்று பலத்த மழை பெய்தும் சபரிமலையில் அதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை. சபரிமலையில் அடுத்த 24 மணிநேரத்தில் சன்னிதானம்,பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் இடிமின்னலுடன் 10-20 மிமீ இடைவெளியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..