தினம் ஒரு ஏலக்காய்..! சுவாசம் சரியாகும்..!
ஏலக்காய் பல ஆண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏலக்காய் வாசனை பொருளாக மட்டுமில்லாமல் பல மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஏலக்காயை மென்று சாப்பிடுவதின் மூலம் என்னெ நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏலக்காய் பொட்டாசியம், புரதம், சோடியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, ஏ ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
- எனக்கு பசி எடுக்கவில்லை மற்றும் சாப்பிட பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கிறது இதனால் வயிறு சம்மந்தபட்ட கோளாறுகள் நீங்குகிறது.
- மார்பு சளி அதிகமாக இருந்தால் மூச்சு விடுவதில் கஷ்டம், இருமம் ஆகியவை இருக்கும்போது ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட மார்பில் உள்ள சளி கரைந்து வெளியேறிவிடும். சளியை உருவாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அழிக்கிறது.
- ஜீரண பாதையில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் தான் வாயில் துர்நாற்றம் வரும். தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட வாய் துர்நாற்றம் நீங்கும்.
- உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கழிவுகளால் உடலுக்கு அடிக்கடி நோய்கள் உண்டாகும், இதனை தடுக்க தினம் ஒரு ஏலக்காய் மென்று சாப்பிட வேண்டும்.
- ஏலக்காயை மென்று சாப்பிடும்போது வாய்புண், பல் வலி, பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் ஆகியவை குணமாகும்.
- சிலருக்கு வெளியில் வாகனங்களில் செல்லும்போது வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படும், அவர்கள் வாயில் ஒரு ஏலக்காய் போட்டு மென்று கொண்டே இருப்பதினால் அத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
- ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இந்த பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
பல நன்மைகளை கொண்ட ஏலக்காயை தினமும் சாப்பிட்டு பயன்பெறுங்கள்.