சமைக்கும்போது உணவில் உப்பு அதிகமாக போட்டுவிடுவீங்களா..? அப்போ இது உங்களுக்குத்தான்..!
டீ போடும்போது ஆரஞ்சு பழத்தோலை ஒரு துண்டு போட்டுவைத்து பின் எடுத்துவிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
நேந்திரங்காய் தோலை ஆவியில் வேகவைத்து பின் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து காயவைத்து எடுத்தால் வத்தல் தயார்.
கூடையில் காய்கறிகளை வைத்துவிட்டு ஈரத்துணியை கொண்டு மூடி வைக்க காய்கறிகள் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
டீத்தூளில் ஏலக்காய்பொடி, காபிதூள் போட்டு வைக்க நல்லா மணமாக இருக்கும்.
பருப்பு வேகவைக்கும்போது சிறிது எண்ணெய் சேர்த்துக் கொண்டால் புரதம் வெளியேறாது.
காபிதூளை ஃபிரிஜ்ஜில் போட்டு வைக்க பிரஷ்ஷாகவும் ஒட்டாமலும் இருக்கும்.
பாசிபருப்பை வேகவைத்து அவல் உப்புமா செய்தால் நல்லா சுவையாக இருக்கும்.
கேக் செய்யும்போது மாவில் சிறிது தேன் கலந்து செய்தால் நல்லா சுவையாகவும் சாஃப்டாகவும் இருக்கும்.
முட்டை வேகவைக்கும்போது நீரில் சிறிது வினிகர் சேர்த்து கொண்டால் கரு உடையாமல் முட்டை இருக்கும்.
வெந்தயக்குழம்பு வைக்க துவரம் பதிலுக்கு கடலைபருப்பு சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
மிளகாய் வறுக்கும்போது சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் நெடிகள் வராது.
ரசம் மற்றும் குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் கொஞ்சமாக சாதம் போட்டுவைத்தால் உப்பு சரியாகிவிடும்.