“பட்டைய கிளப்பும் புஷ்பா…” வசூல் எவ்வளவு தெரியுமா..?
கடந்த 2021 ஆம் ஆண்டில் சுகுமார் இயக்கிய புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகியது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்து பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
புஷ்பா முதல் பாகத்தில் ஒரு ஐட்டம் பாடலான ஓ சொல்றியா மாமா இல்ல ஊஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலக அளவில் வைரலானது. இதே போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. இதில் ஸ்ரீலிலா நடனம் ஆடி உள்ளார்.
இந்நிலையில் தற்போது கடந்த வாரம் வெளியான படம் புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல் 294 கோடியும் இரண்டாம் நாளில் 449 கோடியும் மூன்றாம் நாளில் 621 கோடியாக உயர்ந்தது. நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் இப்படத்தில் வசூல் உயர்ந்து அதிகமாக வசித்துள்ளது. அதன்படி 800 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்தது பட நிறுவனம். அதுமட்டுமல்லாமல் திரக்கு வந்த 2 நாட்களில் 500 கோடி வசூலை கடந்தும் சாதனை படைத்தது. கடந்த நான்கு நாட்களாக புஷ்பா படத்திற்கான வரவேற்பு குறையாமல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது.
திங்கள் கிழமை வார நாளில் முதல் நாள் என்பதால் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது.
இருந்தாலும் அடுத்த சில நாட்களில் இப்படம் ஆயிரம் கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா மாநிலங்களிலும் நன்றாக ஓடினாலும் கேரளாவில் மட்டும் எதிர்பார்த்த வசூலை தராதது ஆச்சரியமாக உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலித்து வருகிறது என்றும் டப்பிங் படங்களை புதிய சாதனை படைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..